TN Govt 108 Ambulance Walk-IN 3rd & 4th Oct 2020 for Driver & Medical Assistant

108 ஆம்புலன்ஸ் ஊர்திக்கு மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர்
பணிக்கு நேர்முக தேர்வு நடைபெற உள்ளது. பணிக்கு நேர்முக தேர்வு நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி இ.ஆ.ப. அவர்கள் தகவல்.





108 ஆம்புலன்ஸ் ஊர்திக்கு மருத்துவ உதவியாளர் மற்றும்
ஓட்டுநர் பணிக்கு நேர்முக தேர்வு நடைபெற உள்ளது. இதுகுறித்து
மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரிää இ.ஆ.ப.ää அவர்கள் தெரிவித்ததாவது.

மருத்துவ உதவியாளர் பணியிடத்திற்கு ஆண் பெண்கள்
விண்ணப்பிக்கலாம் பி.எஸ்.சி மற்றும் டி.ஜி.என்.எம் நர்சிங் பி.எஸ்.சி அல்லது எம்.எஸ்.சி தாவரவியல் விலங்கியல மைக்ரோ பயாலஜி பயோகெமிஸ்ட்ரி பயோடெக் ப்யூர்கெமிஸ்ட்ரி படித்திருக்க வேண்டும். 19 வயதிற்கு மேலும் 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

மருத்துவ உதவி பயிற்சியாளர்களுக்கு எழுத்து தேர்வு மருத்துவ
நேர்முகம் உடற்கூறியல்ää முதலுதவி பணி தொடர்பாகவும் மற்றும்
மனிதவள துறையின் நேர்முக தேர்வுகளும் நடத்தப்படும். இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 50 நாட்கள் வகுப்பறை பயிற்சி மருத்துவமனை ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சிகள் அளிக்கப்படும். தகுதியும் விருப்பமும் உடையவர்கள் கலந்து கொள்ளலாம். மருத்துவ உதவியாளர் சம்பளம் ரூ.13760 ஆகும்.


ஓட்டுநர் பணியிடத்திற்கு ஆண்கள் விண்ணப்பிக்கலாம். 10ஆம்
வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நேர்முகத் தேர்வு அன்று 24
வயதிற்கு மேலும் 35 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். உயரம்
162.5 செ.மீ-க்கு குறையாமல் இருக்க வேண்டும். இலகுரக வாகன
ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 1 ஆண்டு முடித்திருக்க வேண்டும். ஆம்புலனஸ் ஓட்டுநர் சம்பளம் ரூ.13,265 ஆகும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் அவசர கால
உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணி இடங்களுக்கான நேர்முகத்தேர்வு
03.10.2020 மற்றும் 04.10.2020 (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை)
காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை மதர்தெரசா காலேஜ் ரூ
இன்ஜினியரிங் டெக்னாலஜிää மேட்டுச்சாலைää இலுப்பூர்ää புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இதில் தேர்வு பெற்றவர்கள் தமிழகத்தில் எந்தப் பகுதியிலும் பணி நியமனம் செய்யப்படுவார்கள் 12மணி நேரம் இரவுää பகல் என சுழற்சிமுறையில் பணியாற்ற வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பணி நியமன ஆணை அன்றே
வழங்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு 73977 01807 என்ற அலைபேசி எண்ணில்
தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர்
திருமதி.பி.உமாமகேஸ்வரிää இ.ஆ.ப.ää அவர்கள் தெரிவித்துள்ளார்.

OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE

FOR MORE ALL GOVT JOB NOTIFICATION LINK: CLICK HERE

Post a Comment

0 Comments