Village Assistant Interview Questions Tamil | கிராம உதவியாளர் இண்டர்வியூ கேள்வி பதில்

கிராம உதவியாளர் வேலைக்கான​ எழுத்து தேர்வு முடிவை தொடர்ந்து அடுத்து வாசித்தல் / திறன் தேர்வு மற்றும் நேர்காணல் இண்டர்வியூ நடை பெற உள்ளது. Village Assistant Interview Questions கீழ் குடுக்கப்பட்டுள்ளவைகளில் இருந்து கூட​ திறன் தேர்வு மற்றும் நேர்காணலில் உங்களிடம் கேள்விகள் கேக்கலாம்​.


Village Assistant Interview Questions Tamil

கிராம உதவியாளர் என்றால் என்ன​?

பதில்: தமிழகத்தில் வருவாய்க் கிராமங்களின் அதிகாரியாக உள்ள (VAO) கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கீழ், கிராம உதவியாளர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். வரி வசூலித்தல், கிராம கணக்குகளை நிர்வகித்தல், நில வருவாய் ஆவணங்களை தயாரித்தல், கணக்குகளை முறையாக சரியாக வைத்து கொள்ளுதல், பிறப்பு, இறப்பு போன்ற பல்வேறு பதிவேடுகளை தயாரித்தல் மற்றும் புதிப்பித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்பவரே கிராம நிர்வாக உதவியாளர் ஆவார். அதாவது, கிராம நிர்வாக அலுவலருக்கு உதவியாளர் போல் செயல்பட வேண்டும்.

கிராம உதவியாளர் பணி தமிழ்நாட்டில் எப்போது தோற்றுவிக்கப்பட்டது?

பதில்: தமிழ்நாடு அரசு அரசாணை எண்: 625, 6 சூலை 1995-ன்படி, கிராம உதவியாளர் பணியிடங்கள் தமிழ்நாட்டில் தோற்றுவிக்கப்பட்டது. ஒவ்வொரு வருவாய் கிராமத்திற்கும் ஒரு கிராம உதவியாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். கிராம நிர்வாக அலுவலரின் கீழ் கிராம உதவியாளர் செயல்படுவார்.

கிராம உதவியாளர் பணி முன்னர் எவ்வாறு அழைப்பர்?

பதில்: கிராம உதவியாளர் முன்னர் தலையாரி,  தண்டல் காரர் என்று அழைப்பர்.

கிராம உதவியாளர் யாருக்கு கீழ் செயல்படுவார்?

பதில்: கிராம நிர்வாக அலுவலரின் VAO கீழ் கிராம உதவியாளர் செயல்படுவார்.

எந்தெந்த​ கிராமங்களுக்கு கிராம உதவியாளர் நியமிக்கப்படுகின்றனர்?​

பதில்: ஒவ்வொரு வருவாய் கிராமத்திற்கும் ஒரு கிராம உதவியாளர் நியமிக்கப்படுகின்றனர்.

கிராம உதவியாளரின் முக்கிய​ பணிகள் என்ன​?

பதில்: 1. கிராமத்தின் நன்செய், புன்செய், தரிசு, புறம்போக்கு, நத்தம் நிலங்கள் மற்றும் வீடுகள், மனைகள் குறித்த புள்ளிவிவரங்கள் அறிந்து வைத்திருத்தல் வேண்டும். (இது தொடர்பாக​ உங்களிடம் நஞ்சை என்ன? புஞ்சை என்ன​? இது மாதிரி கேள்விகள் கேக்கலாம்)

2. கிராமத்தில் விளையும் பயிர்களின் விவரம், நிலவரி விவரம், கிராமங்களில் நடக்கும் பிறப்பு, இறப்பு, தற்கொலை, விபத்து, கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு மற்றும் கிராமத்தில் வசிப்போரின் தகவல்களை வருவாய்த் துறையின் கிராம நிர்வாக அலுவலர் போன்ற உயர் அதிகாரிகளுக்கு தேவைப்படும்போது தெரிவித்தல் வேண்டும்.

3. முதியோர் ஓய்வூதியம், சாதி, வருவாய், இருப்பிடம், வாரிசு சான்றிதழ்களை வருவாய்த் துறை வழங்கும் முன்னர், உரியவர்களை விசாரித்தல் வேண்டும்.

4. மேலும் கிராம ஆவணங்களை பாதுகாத்தல், விளைநிலத்தை அளத்தல், ஆக்கிரமிப்பை அகற்றுதல் போன்ற செயல்களில் உதவியாக இருத்தல் வேண்டும்.

5. காவல் துறையினர் ஒரு கிராமத்திற்குள் நடந்த குற்றச் செயல்கள் குறித்து விசாரணைக்கு உதவியாக இருத்தல் வேண்டும்.

Tn Village Assistant Result Link: Click Here

Post a Comment

0 Comments