இரயில்வே துறையில் ரூ.21000 சம்பளத்தில் உடனடி வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்!

இரயில் நிலைய குழந்தைகள் உதவி மையத்தில் (Supervisor) பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. Applications are invited for the post of Supervisor posts to Railway Station District Child Help Line Units Recruitment 2026, தாம்பரம் இரயில்வே நிலைய மற்றும் குழந்தைகள் உதவி மையத்தில் மேற்பார்வையாளர் (Supervisor) பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. "TAMBARAM RAILWAY STATION SUPERVISOR POST RECRUITMENT 2026

செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் கீழ், தாம்பரம் இரயில்வே நிலைய மற்றும் குழந்தைகள் உதவி மையத்தில் மேற்பார்வையாளர் (Supervisor) பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
பணி விவரங்கள்
பதவி: மேற்பார்வையாளர் (Supervisor)
பணியிடங்கள்: 02
மாத ஊதியம்: ₹21,000 (மதிப்பூதியம்)
கல்வித் தகுதி மற்றும் அனுபவம்
கல்வித்தகுதி:
  • B.A சமூகப் பணி (Social Work), கணினி அறிவியல் (Computer Sciences), தகவல் தொழில்நுட்பம் (IT), சமூகவியல் (Sociology) அல்லது சமூக அறிவியல் (Social Sciences) பாடப்பிரிவுகளில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
கூடுதல் திறன்:
  • கணினித் திறன் (Proficiency in Computers) பெற்றிருக்க வேண்டும்.
முன்னுரிமை:
  • அவசரகால உதவி மையங்களில் (Emergency Helplines) பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பப் படிவம்: Click Here
தேவையானவை: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்விச் சான்றிதழ் நகல்களை இணைக்க வேண்டும்.
கடைசி தேதி: 10.02.2026 | மாலை 5.45 மணி வரை
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
அறை எண்.Fo-06, தரை தளம், F-Block,
புதிய மாவட்ட ஆட்சியரக வளாகம்,
செங்கல்பட்டு - 603 111.
விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது எப்படி?
1 புகைப்படம்: விண்ணப்பத்தின் வலது மேல்புறத்தில் உங்கள் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டவும்.
2 அடிப்படை விவரங்கள்: உங்கள் பெயர் மற்றும் முகவரியை CAPITAL LETTERS-இல் (ஆங்கில பெரிய எழுத்துக்கள்) எழுதவும். தந்தை/கணவர் பெயர், பிறந்த தேதி, வயது மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றைச் சரியாகக் குறிப்பிடவும்.
3 கல்வித் தகுதி: உங்கள் பட்டப்படிப்பு விவரங்களை (Social Work/CS/IT/Sociology போன்றவை) குறிப்பிடவும். இதனுடன் கல்விச் சான்றிதழ் நகல்களை (Supporting Documents) இணைக்க மறக்காதீர்கள்.
4 பணி அனுபவம்: இதற்கு முன் பணிபுரிந்த நிறுவனத்தின் பெயர், பதவி மற்றும் எத்தனை ஆண்டுகள் பணிபுரிந்தீர்கள் என்ற விவரத்தைப் படிவத்தின் 2-வது பக்கத்தில் உள்ள அட்டவணையில் நிரப்பவும். இதற்கு அனுபவச் சான்றிதழ் நகல்களை இணைக்க வேண்டும்.
5 உறுதிமொழி & கையொப்பம்: படிவத்தின் இறுதியில் உங்கள் பெயரை எழுதி, தேதியுடன் கூடிய கையொப்பத்தை (Signature of the Applicant) இடவும்
குறிப்பு: விண்ணப்பத்தில் தவறான தகவல்கள் இருந்தால் உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். பூர்த்தி செய்த படிவத்துடன் அனைத்துச் சான்றிதழ் நகல்களையும் இணைத்து அனுப்பவும்.
முக்கிய இணைப்புகள்

Post a Comment

0 Comments