தமிழக​ அரசு நூலகர் பணியிடங்கள் வேலைவாய்ப்பு 2023 | Tamilnadu Govt Librarian Posts Jobs 2023

தமிழகத்தில் நூலகர் பணியிடங்களை நிரப்ப முடிவு.. டிஎன்பிஎஸ்சி புதுஅறிவிப்பு, தமிழ்நாட்டில் காலியாக உள்ள நூலகர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.


தமிழ்நாட்டில் காலியாக உள்ள நூலகர் மற்றும் மாவட்ட நூலக அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.19 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை பல்வேறு படிநிலைகளில் வேலையை பொறுத்து சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பணியை டிஎன்பிஎஸ்சி எனும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மேற்கொண்டு வருகிறது. 2023ம் ஆண்டில் நடத்தப்பட உள்ள தேர்வுகள் மற்றும் நிரப்பப்பட உள்ள பணியிடங்கள் குறித்த பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

அந்த பட்டியலின் அடிப்படையில் தேர்வுகள் நடத்தவும், ஆட்சேர்ப்புக்கான அறிவிப்புகளையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்போது டிஎன்பிஎஸ்சி சார்பில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:

காலிபணியிடங்கள் எவ்வளவு:

தமிழ்நாட்டில் காலியாக உள்ள நூலகர் மற்றும் மாவட்ட நூலக அலுவலர் பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 5 பிரிவுகளில் நேர்க்காணல் மற்றும் நேர்க்காணல் இல்லாத வகையில் 35 இடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. அதன்படி கல்லூரி நூலகர் (நேர்க்காணல்) பணிக்கு 8 பேர், நூலகர் மற்றும் இன்பர்மேஷன் ஆபிசர் (நேர்க்காணல்) பணிக்கு ஒருவர், மாவட்ட நூலக அதிகாரி (நேர்க்காணல்) பணிக்கு 3 பேர், நூலக உதவியாளர் (நேர்க்காணல் கிடையாது) பணிக்கு 2 பேர், நூலகர் மற்றும் இன்பர்மேஷன் அசிஸ்டென்ட் கிரேடு II (நேர்க்காணல் கிடையாது) பணிக்கு 21 பேர் என மொத்தம் 35 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மாத சம்பளம் எவ்வளவு:

கல்லூரி நூலகர் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.57700 முதல் ரூ.2 லட்சத்து 11 ஆயிரத்து 500 வரை சம்பளம் கிடைக்கும். நூலகர் மற்றும் இன்பர்மேஷன் ஆபிசர், மாவட்ட நூலக அதிகாரி பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.56,100 முதல் 2 லட்சத்து 5 ஆயிரத்து 700 வரை சம்பளம் வழங்கப்படும் நூலக உதவியாளர் பணிக்கு மாதம் ரூ.35,400 முதல் ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்து 400 வரையும், இன்பர்மேஷன் அசிஸ்டென்ட் கிரேடு II பணிக்கு மாதம் ரூ.19,500 முதல் ரூ.71 ஆயிரத்து 900 வரையும் சம்பளம் வழங்கப்படும்.

வயது வரம்பு என்ன:

ஒவ்வொரு பணிக்குமான வயது வரம்பு என்பது தனித்தனியே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கல்லூரி நூலகர் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 59 வயதுக்குள் இருக்க வேண்டும். நூலகர் மற்றும் இன்பர்மேஷன் ஆபிசர், மாவட்ட நூலக அதிகாரி பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 37 வயதுக்குள்ளும், நூலக உதவியாளர், இன்பர்மேஷன் அசிஸ்டென்ட் கிரேடு II பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 32 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

TNPSC Recruitment 2023 35 Librarian Posts | TNPSC Librarian Recruitment 2023 | TNPSC Librarian Notification 2023 | TNPSC Librarian 2023 Online Application @ http://tnpscexams.in/ – TNPSC invites Online applications for recruitment of 35 College Librarian, Librarian and Information Officer, District Library Officer, Library Assistant, Librarian and Information Assistant Grade II Posts. This online facility will be available in the Official website @ https://www.tnpsc.gov.in/ from 31.01.2023 to 01.03.2023.

TNPSC Librarian Recruitment 2023: [Job Summary]

Organization Name: Tamil Nadu Public Service Commission
Notification No: Advertisement No. 650 | Notification No. 04/2023 | Dated: 31.01.2023
Job Category: Tamilnadu Govt Jobs
Employment Type: Regular Basis
Name Of Posts: College Librarian, Librarian and Information Officer, District Library Officer, Library Assistant, Librarian and Information Assistant Grade II Posts
Place of Posting: Tamilnadu
Starting Date: 31.01.2023
Last Date: 01.03.2023
Apply Mode: Online
Official Website: https://www.tnpsc.gov.in/
TNPSC Recruitment 2023 35 Librarian Posts

கல்வி தகுதி என்ன:

கல்லூரி நூலகர் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் லைப்ரேரி சயின்ஸ் அல்லது இன்பர்மேஷன் சயின்ஸ் படிப்பில் முதுநிலை படிப்பையும், டிப்ளமோவில் முதுநிலை படிப்பு, பிஎச்டி முடித்திருக்க வேண்டும். நூலகர் மற்றும் இன்பர்மேஷன் ஆபிசர், மாவட்ட நூலக அதிகாரி பணிக்கு விண்ணப்பம் செய்வோர் லைப்ரேரி சயின்ஸ் அல்லது இன்பர்மேஷன் சயின்ஸ் படிப்பில் முதுகலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நூலக உதவியாளர், நூலகர் பணிக்கு லைப்ரேரி சயின்ஸ்/இன்பர்மேஷன் சயின்ஸ் பிரிவில் டிகிரியும், மற்றும் இன்பர்மேஷன் அசிஸ்டென்ட் கிரேடு II பணிக்கு டிகிரி அல்லது முதுகலை படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Selection Process:

OMR/Computer Based Test (CBT) Method. / Certificate Verification

Application Fee/Exam Fee for TNPSC Librarian:

TNPSC One Time Registration Fee: Rs.150/-

Examination Fee:

Both Interview & Non-Interview posts: Rs.200/-

Non-Interview posts only: Rs.100/-

Examination Fee Concessions For More Fee Details Check Official Notification

விண்ணப்பம் செய்வது எப்படி:

விண்ணப்பம் செய்பவர்களுக்கு ஒருமுறை பதிவு கட்டணமாக ரூ.150, தேர்வுக்கட்டணமாக ரூ.200 என மொத்தம் ரூ.350 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூடி பிரிவினருக்கு தேர்வு கட்டணம் கிடையாது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் மார்ச் 1ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.tnpsc.gov.in/ சென்று ஆன்லைன் முறையில் விண்ணப்பம் செய்ய வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு மற்றும் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

Candidate(s) fulfilling all the above clearly laid down criteria will have to apply online only through the link on the TNPSC website in the careers webpage under current openings section i.e. https://www.tnpsc.gov.in/ from 31.01.2023 to 01.03.2023. No other mode of application will be accepted.

TNPSC Librarian Official Notification & Application Link:

TNPSC Official Website Career Page: Click Here

TNPSC Official Notification PDF Click Here

TNPSC One Time Registration Link Click Here

TNPSC Online Application Form Click Here

Post a Comment

0 Comments